விளையாட்டு

டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசுவேன்: அஸ்வின் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசுவேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வின் கூறியதாவது:

முழு உடல்தகுதி பெற்று விடுவேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக வீசுவேன்.

ஒருநாள் தொடரை இழந்தது குறித்து: நமது அணி ஒப்பிடுகையில் அனுபவம் குறைவான அணி, 100 போட்டிகள் விளையாடியுள்ள ஒரு சில வீரர்களே நம் அணியில் உள்ளனர். இந்த அணி நிலைத்து சிறப்பாக ஆட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

மாறாக தென் ஆப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ், டுபிளெஸ்ஸிஸ் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். ஆனால் கடும் சவாலான தொடர் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், கான்பூரில் கடைசி ஓவர் நமக்கு சாதகமாக அமைந்திருந்தால் முடிவுகள் வித்தியாசமாக மாறியிருக்கும்.

இவ்வாறு கூறினார் அஸ்வின்.

SCROLL FOR NEXT