சர்வதேச அளவில் இளை யோருக் கான டேபிள்டென்னிஸ் போட்டியில் விளையாட உடுமலை ஜிவிஜி கல்லூரி மாணவி தகுதி பெற்றுள்ளார்.
தேசிய டேபிள்டென்னிஸ் கழகத்தின் மூலம் இக்கல்லூரியைச் சேர்ந்த கணிதவியல் முதலாம் ஆண்டு மாணவி அபிநயா இந்திய அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரும் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் இந்தியா உட்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் இந்திய அணிக்காக அபிநயாவும் விளையாட உள்ளார்.