பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக் காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பைன் முகுருசா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசை யில் 58-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் கிகி பெர் டென்ஸை சந்தித்தார். இதில் செரீனா 7-6(9-7), 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
முதல் செட்டில் பெர்டென்ஸ் கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் தனது அனுபவத்தால் செரீனா அந்த செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டில் பெர்டென்ஸால் அந்தளவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.
இரண்டாவது அரையிறுதி யில் தரவரிசையில் 4-வது இடத் தில் உள்ள ஸ்பெயினின் கார் பைன் முகுருசா, 21-ம் நிலை வீராங் கனையான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை எதிர் கொண்டார். இதில் முகுருசா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டி யில் நுழைந்தார். பட்டம் வெல் வதற்கான இறுதிப்போட்டியில் செரீனா-முகுருசா மோது கின்றனர்.
மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் ரஷ்யாவின் மகரோவா, எலினா வெஸ்னினா ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் கிரெஜிகோவா, சைனிகோவா ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை எதிர்த்து விளையாடினார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.