விளையாட்டு

மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நடால்

செய்திப்பிரிவு

ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை தோற்கடித்து அரையிறுதியை உறுதி செய்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரயோனிச் வழக்கம்போல் அதிரடி சர்வீஸ்களை அள்ளி வீசினார். இதனால் தடுமாற்றம் கண்ட நடால், முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் ரயோனிச்சிடம் இழந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட நடால், அடுத்த இரு செட்களை கைப்பற்றி ரயோனிச்சை வீழ்த்தினார்.

மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறை யாக நடால் ஒரு செட்டை இழந்தது ரயோனிச் சிடம்தான். இதற்கு முந்தைய போட்டிகள் அனைத்திலும் செட்டை இழக்காமல் அவர் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடால் தனது அரையிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். தாமஸ் பெர்டிச் தனது காலிறுதியில் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் உக்ரைனின் அலெக்சாண்ட்ரோ டோல் கோபோலோவை சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT