ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொட ரில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்திய அணி தனது முதல் ஆட் டத்தில் பரம வைரியான பாகிஸ் தானை 4-ம் தேதி எதிர்த்து விளை யாடுகிறது. 8-ம் தேதி இலங்கை யையும், 11-ம் தேதி தென் ஆப்பிரிக் காவையும் இந்திய அணி சந்திக் கிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் ஐசிசி இணையத்தளத்தில் கூறியிருப்பதாவது:
ஐசிசி தொடரின் 50 ஓவர் போட்டி யில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் இலக்குடன் நாங்கள் விளையாடுவோம். இந்த தொடரில் அர்த்தமுள்ள பங்க ளிப்பை செய்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஐசிசி தொடர் எப்போதுமே சவாலாகவே இருக்கும். எல்லா அணிகளுமே பட்டம் வெல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடனே களமிறங்கும். நாங்கள் கடினமான குரூப்பில் இடம் பெற்றுள்ளோம். ஆனால் அதேவேளையில் நாங்கள் உள்ளூர் சீசனை மிகவும் வெற்றிகரமாக முடித்துள்ளோம்.
அந்த வெற்றியின் தருணங் களை ஐசிசி சாம்பியன்ஸ் தொடருக்கும் எடுத்துச் செல்வதை இலக்காக கொண்டுள்ளோம். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு பிறகு தொடர்ச்சியாக இரு முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியாக நாங்கள் மாறுவோம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை நடத்த லண்டன் மிகச்சிறந்த இடம். இங்கு ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். இதனால் மிகப் பெரிய ஆதரவு கிடைக்கும். இது சொந்த மண்ணில் விளையாடு வதை போன்ற உணர்வை தரும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
2002-ம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் யுவராஜ் சிங் அறிமுகமானார். அதன் பின்னர் 2006-ம் ஆண்டு வரை அனைத்துவிதமான ஐசிசி போட்டிகளிலும் அவர் பங்கேற்றார். 2009 மற்றும் 2013-ம் ஆண்டில் நடைபெற்ற தொடர்களில் யுவராஜ் சிங் பங்கேற்கவில்லை.
35 வயதான யுவராஜ் சிங் 296 ஒருநாள் போட்டிகளில் விளை யாடி 36.80 சராசரியுடன் 8,539 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 51 அரை சதங்களும் அடங்கும்.