சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் முன்னாள் மேயர் சம்பந்தம் ஸ்போர்ட்ஸ் பவுண்டேசன் ஆதர வுடன் சூப்பர் லீக் ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு முன்னேறும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.75 ஆயிரமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.
நேற்று மாலை நடைபெற்ற தொடக்க விழாக்கு சென்னை மாவட்ட ஆக்கி சங்க தலைவர் பஞ்சாபகேசன் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். முதல் ஆட்டத்தில் சாய்-மத்திய கலால் வரி அணிகள் மோதின. இரு அணிகளும் கடைசி வரை கோல்கள் அடிக்காததால் கோல்கள் இன்றி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.