விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை

ராய்ட்டர்ஸ்

இலங்கை கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரை கிரிக்கெட் வீரர் மலிங்கா ‘குரங்கு’ என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மலிங்கா மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில், "வாரிய ஒப்பந்தத்தை மீறி ஊடகத்தில் கருத்துகளை தெரிவித்த மலிங்கா சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போனதால் இலங்கை அணி வீரர்களின் உடல் தகுதியை விமர்சித்து, அவர்களின் கிரிக்கெட் ஆயுள் குறித்து கேள்வி எழுப்பினார் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மலிங்கா அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா கருத்து குறித்து பதிலளிக்கும்போது "கிளியின் கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT