விளையாட்டு

10மீ ரைபிள் மகளிர் பிரிவில் இந்தியா ஏமாற்றம்: அபூர்வி, அயோனிகா வெளியேற்றம்

செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 10மீ ரைபிள் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றமளித்து வெளியேறினர்.

அபூர்வி சந்தேலா மற்றும் அயோனிகா பால் ஆகியோர் முன்னேறத் தவறினர். சந்தேலா 411.6 புள்ளிகள் பெற்று 512 போட்டியாளார்களில் 34-வதாக முடிய அயோனிகா பால் 403 புள்ளிகள் பெற்று 47-வது இடத்தில் முடிந்தார்.

இவர்கள் இருவரும் 2014 காமன்வெல்த் போட்டிகளில் முறையே தங்கம், வெள்ளி வென்றவர்கள்.

தகுதிச் சுற்று போட்டியில் இதே பிரிவில் சீன வீராங்கனை முதலிடம் வகித்தார்.

தகுதி பெற்ற மற்ற 7 வீராங்கனைகள் வருமாறு: ஜெர்மனியின் இங்லீடர், இரானின் எலஹே அகமதி, ரஷ்யாவின் டேரியா டோவினா, அமெரிக்காவின் வர்ஜினியா த்ராஷர், போலந்தின் ஸ்னீஸனா பெய்சிக் மற்றும் சீனாவின் சிலிங் யீ. ஆகியோர்களாவர்

SCROLL FOR NEXT