சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் ஐசிசி நிர்வாக முறைகளை மாற்ற செய்ய முயற்சி நடக்கிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
ஐசிசியின் காலாண்டு செயற்குழு கூட்டம் துபையில் ஜனவரி 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் ஐசிசி நிர்வாக முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
இதில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இது விஷயத்தில் தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவை பாகிஸ்தான் கோரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.