விளையாட்டு

மீண்டு வருவேன்: விஸ்வநாதன் ஆனந்த்

செய்திப்பிரிவு

தோல்வியில் இருந்து மீண்டு வருவேன் என்று விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற லண்டன் கிளாசிக் செஸ் போட்டியின் காலிறுதியில் ரஷ்யாவின் விளாதிமிர் கிராம்னிக்கிடம் ஆனந்த் தோல்வியடைந்தார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் இளம் வீரர் மேக்னஸ் கார்சனிடம் அவர் தோல்வியடைந்திருந்தார்.

ஆனந்துக்கு 44 வயதாகிவிட்டதும் இத்தோல்விகளுக்குக் காரணம் என்று கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் லண்டனில் இருந்து நாடு திரும்பியுள்ள ஆனந்த் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியது: தோல்விக்கு எனது வயது ஒரு காரணம் என்று நான் நினைக்கவில்லை. இப்போது செஸ் உலகில் முன்னணியில் இருப்பவர்கள் அனைவருமே இளைஞர்கள்தான். ஆனால் அதே நோக்குடன் செஸ் விளையாட்டை நாம் பார்க்கத் தேவையில்லை.

விளையாட்டின் மீதான எனது அதீத ஆர்வம் குறைந்துவிடவில்லை. எனவே மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவேன். காலம் இதனை நிரூபிக்கும் என்று ஆனந்த் கூறினார்.

SCROLL FOR NEXT