இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணியை வென்றது நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அசாம் மாநிலம் குவாஹாட்டி யில் இந்த போட்டி நடைபெற்றது.
ஆட்டத்தின் முதல் பாதியின் கடைசி நேரத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதையடுத்து 2-வது பாதியில் பரபரப்பு ஏற்பட்டது. பதில் கோல் அடித்து கோல் கணக்கை சமன் செய்ய கேரளா பிளாஸ்டர்ஸ் வீரர்கள் கடுமையாக முயற்சித் தனர். எனினும் ஆட்டத்தின் முடிவு வரை கோல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி வெற்றி பெற்றது.
நார்த் ஈஸ்ட் அணியின் உரிமையாளர்களில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமும் ஒருவர். சச்சின் டெண்டுல்கர் கேரள அணியின் உரிமையாளர்களில் ஒருவர். இருவருமே போட்டியை நேரில் வந்து பார்த்தனர். இன்று கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் புனே சிட்டி அணிகள் விளையாடுகின்றன.