விளையாட்டு

ஸ்குவாஷ் போட்டி சென்னை மாணவன் சாதனை

பிடிஐ

ஜூனியர் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பட்டம் வென்று சென்னை மாணவன் வேலவன் செந்தில்குமார் சாதனை படைத்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் வேலவன் செந்தில்குமார் இறுதிப் போட்டியில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த மொகமது அல்-ஷர்ராஜை எதிர்த்து விளையாடினார். இதில் வேலவன் செந்தில்குமார் 12-14, 9-11, 11-6, 11-8, 11-7 என்ற செட்கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

இதன் மூலம் ஆசிய சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெரு மையை வேலவன் செந்தில் குமார் பெற்றார். கடைசியாக 2010-ம் ஆண்டு இந்த தொடரில் இந்தியாவின் ரவி தீட்ஷித் பட்டம் வென்றிருந்தார். இவர்கள் இருவரும் இந்திய ஸ்குவாஷ் அகாமிடயில் பயிற்சி பெற்ற வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் தொடரில் பல்வேறு வயது பிரிவில் நடை பெற்ற போட்டிகளில் இந்தியா வில் இருந்து 31 வீரர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT