விளையாட்டு

ரிக்கி பாண்டிங்கின் சிறந்த ஐபிஎல் அணிக்கு தோனி கேப்டன்: ஏ.பி.டிவில்லியர்ஸ் இல்லை

இரா.முத்துக்குமார்

முன்னாள் வீரர்கள் பலர் தங்களுக்கு பிடித்த அனைத்து கால உலக லெவன் கிரிக்கெட் அணியை தேர்ந்தெடுக்கும் போது ரிக்கி பாண்டிங் சற்று வித்தியாசமாக சிறந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணிக்கு தோனி கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராவார். ஐபிஎல் கிரிக்கெட் அணி விதிமுறைகளின் படியே 4 அயல்நாட்டு வீரர்கள் 7 இந்திய வீரர்களை அவர் தேர்வு செய்துள்ளார்.

விராட் கோலி இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒன்றுமே செய்யவில்லை என்று விமர்சித்த பாண்டிங் கோலியை தன் அணியில் தேர்வு செய்துள்ளார், ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸைச் சேர்க்காமல் விட்டுள்ளார்.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், கிறிஸ் கெய்ல்.

கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட்டில் முதன் முதலில் 10,000 ரன்களைக் கடந்தவர் என்ற அடிப்படையிலும் டேவிட் வார்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகரன்களை எடுத்தவர் என்ற வகையிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

மிடில் ஆர்டர்: விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா.

மேலும் கேப்டன் தோனி, டிவைன் பிராவோ, அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், லஷித் மலிங்கா, ஆஷிஷ் நெஹ்ரா.

பாண்டிங்கின் சிறந்த ஐபிஎல் அணி வருமாறு:

கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி (கேப்டன்), டிவைன் பிராவோ, அமித் மிஸ்ரா, ஹர்பஜன் சிங், லஷித் மலிங்கா, ஆஷிஷ் நெஹ்ரா.

SCROLL FOR NEXT