இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வியடைந்ததை தொடர்ந்து அலாஸ்டர் குக் கடந்த வாரம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து 26 வய தான ரூட் கூறும்போது, ‘‘இங்கி லாந்து அணியின் கேப்டனாக நிய மிக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. நான் சலுகை பெற்றவனாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன்’’ என்றார்.