இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக கவுதம் காம்பீர் தேர்வு செய்யப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் போட்டியில் ராகுலுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் 2-வது இன்னிங்ஸில் பீல்டிங் செய்யவில்லை. இந்நிலையில் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டி யில் ராகுல் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காம்பீருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப் பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று காம்பீருக்கு உடல் தகுதி சோதனை நடைபெற்றதாகவும் அதில் அவர் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
காம்பீர் இந்த ஆண்டில் உள்ளூர் தொடர்களில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத் தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பிங்க் பந்து துலீப் டிராபியில் அவர் முறையே 94, 36, 90, 59, 77 ரன்கள் சேர்த்தார். இதனால் அவர் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மாற்று வீரராக சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
34 வயதான காம்பீர், இந்திய அணிக்காக 56 டெஸ்ட் போட்டி களில் பங்கேற்று 9 சதம், 21 அரை சதங்கள் உட்பட 4,046 ரன்கள் குவித் துள்ளார். கடைசியாக அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விளையாடி யிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் தக வல்கள் வெளியாகி உள்ளன. அவ ருக்கும் உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது.