விளையாட்டு

பிரதமர் மோடியைச் சந்தித்து ஆசி பெற்றார் சச்சின் டெண்டுல்கர்

பிடிஐ

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற திரைப்படம் வெளியாவதையடுத்து பிரதமர் மோடியைச் சந்தித்து ஆசி பெற்றார் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர்.

மோடியுடனான சந்திப்பை தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

“மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து என் படம் குறித்து சுருக்கமாகக் கூறி அவரிடம் ஆசி பெற்றேன்” என்று புகைப்படத்துடன் வாசகத்தை வெளியிட்டுள்ளார் சச்சின்.

சச்சினுடன் மனைவி அஞ்சலியும் சென்றிருந்தார்.

பிரதமரும் தன் ட்விட்டரில், “அவரது வாழ்க்கைப் பயணமும் சாதனைகளும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்வதோடு 125 கோடி மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தை ரவி பக்சந்த்கா 200 நாட் அவுட் என்ற பேனரின் கீழ் தயாரிக்க பிரிட்டனின் ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் அடம் மே 26-ம் தேதி உலகம் முழுதும் திரைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT