சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. கெய்த் வாஸ், சச்சின் உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளார். சுயநலமின்றி கிரிக்கெட்டுக்கு தன்னை அர்ப்பணித்த அவரை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி தீர்மானம் ஒன்றை திங்கள்கிழமை கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து எவ்வித விவாதமும் இன்றி சச்சினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.