விளையாட்டு

தனிநபர் வில்வித்தை ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி, பம்பாய்லா தேவி வெளியேற்றம்

செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக் தனி நபர் மகளிர் வில்வித்தை ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பம்பாய்லா தேவி ஆகியோர் தோல்வியைத் தழுவி ஏமாற்றத்துடன் வெளியேற்றம் கண்டனர்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உள்ள வில்வித்தை தனிநபர் ரீகர்வ் பிரிவில் தீபிகா குமாரி தைபேயின் உலகத் தரவரிசை 2-ம் நிலை வீராங்கனை டன் யா டிங் என்பவரிடம் தோல்வு தழுவி ஏமாற்றமளித்தார்.

டின் யா டிங் மிகவும் அனாயசமாக 10 புள்ளிகள் இலக்கை தாக்கினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 27-28, 26-29, 27-30 என்ற செட்கள் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் தைபே வீராங்கனை.

அதுவும் கடைசியில் டின் யா டிங் குறி வைத்த 3 இலக்குகளுமே 10 புள்ளிகளைத் தாக்கி 30 புள்ளிகள் என்பது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அனாயாச ஆட்டமாகும்.

மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ வீராங்கனை அலியாண்ட்ரா வாலென்சியாவை எதிர் கொண்ட பம்பாய்லா தேவியும் 18-26, 26-23, 27-28, 23-25 என்ற செட்களில் தோல்வி தழுவினார், முக்கியமான 4வது செட்டில் முதல் ஷாட்டிலேயே 6 புள்ளிகளில் அம்பு குத்தியதால் மீள முடியவில்லை.

ஆகவே, தீபிகா குமாரி, பம்பாய்லா தேவி இருவரும் ஏமாற்றமளித்தனர்.

SCROLL FOR NEXT