விளையாட்டு

பிரெஞ்சு ஓபனில் சானியா ஜோடி தோல்வி

செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் சானியா ஜோடி தோல்வியடைந்தது.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடி தங்களது முதல் சுற்றில் 6-7 (5-7), 6-1, 2-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இடம் பெறாத ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிஷென்கோவா, ஆஸ்தி ரேலியாவின் தரியா கவுரிலோவா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, உருகுவேயின் பாப்லோ குவாஸ் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

SCROLL FOR NEXT