விளையாட்டு

ஐஎஸ்எஸ்எப்: பிந்த்ராவுக்கு புதிய பதவி

பிடிஐ

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளன (ஐஎஸ்எஸ்எப்) வீரர்கள் கமிட்டியின் தலைவராக இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் அபிநவ் பிந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியரான அபிநவ் பிந்த்ராவுக்கு புதிய பதவி அளிக்கப்பட்டிருப்பது தொடர்பான விவரங்களை கடிதம் மூலம் இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்துக்கு தெரிவித்துள்ளது ஐஎஸ்எஸ்எப்.

இது தொடர்பாக பிந்த்ரா கூறுகையில், “வீரர்கள் கமிட்டிக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே கிடைத்திருக்கும் மிகப்பெரிய கவுரவம்” என்றார்.

SCROLL FOR NEXT