இந்திய ஒலிம்பிக் அணியின் ஊட்டச்சத்து ஸ்பான்ஸராக ஹெர்பா லைஃப் செயல்பட உள்ளாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவிலான ப்ரீமியர் ஊட்டச்சத்து நிறுவனமான ஹெர்பா லைஃப் இண்டர் நேஷனல் இந்தியா அமைப்பு, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புடன் இதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஹெர்பா லைஃப் இண்டர்நேஷனல் இந்திய அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் அஜய் கண்ணா கூறும்போது, " ஹெர்பா லைஃபின் முக்கிய கொள்கை களில் ஒன்று விளையாட்டு களுக்கான கூட்டாண்மையாகும். நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான, துடிப்பான வாழ்க்கை முறைக்கான உறுதிப்பாட்டை எங்கள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் அணியுட னான இந்த கூட்டாண்மை, எங் களது விளையாட்டு ஸ்பான்ஸர் ஷிப் செயல்பாடுகளில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். தேசிய அளவில் இந்திய அணிக்கு இத்தகைய ஸ்பான்ஸர்ஷிப்பை வழங்கும் முதல் இந்திய நிறுவனமாகவும் நாங்கள் திகழ்கிறோம். ஒவ்வொரு வீரரும் அவரது கனவுகள் மற்றும் லட்சியங்களை அடைய எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
வியட்னாம், இஸ்ரேல் ஒலிம் பிக் அணிகளுக்கும் இந்நிறுவனம் ஸ்பான்ஸராக உள்ளது குறிப் பிடத்தக்கது.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் விளையாட் டுகள் மற்றும் விளையாட்டு வீரர் கள் மேம்பாட்டுக்காக ஹெர்பா லைஃப் நிறுவனம் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்புடன் ஒரு நீண்ட கால கூட்டாண்மையை மேற் கொள்ளவுள்ளது.