தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்சிஏ லீக் டி 20 தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 4-வது வாரத்தில் தொடங்குகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தில் பதிவு செய்துள்ள வீரர்களுக் கான உள்ளூர் அளவிலான போட்டியாக இது நடத்தப்படு கிறது. இதில் கலந்து கொள்ளும் தூத்துக்குடி அணியை அதிகபட் சமாக ரூ.5.21 கோடிக்கு தூத்துக் குடி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. தென் சென்னை அணியை ரூ.5.13 கோடிக்கு மெட் ரோநேசன் சென்னை டெலிவிஷன் நிறுவன மும், கோவை அணியை லைக்கா மொபைல் நிறுவனம் ரூ.5.01 கோடிக்கும் விலைக்கு வாங்கி உள்ளன.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். மொத் தம் 27 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலியில் நடைபெறுகிறது. பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.60 லட்சம் கிடைக்கும். அரையிறுதி யில் தோல்வியடையும் அணிகள் தலா ரூ.40 லட்சத்தை பெறும். மற்ற அணிகளுக்கு தொடரில் பங்கேற்றதற்காக தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்.