மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
மலேசிய மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் போட்டிகள் சரவாக் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நெவால் தாய்லாந்தின் சோசவுவாங்கை எதிர்த்து ஆடினார். 46 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், சாய்னா நெவால் 22-20, 22-20 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக சரியாக ஆடமுடியாமல் இருந்த சாய்னாவுக்கு இந்த வெற்றி புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. இது சாய்னா நெவால் வென்றுள்ள 23-வது சாம்பியன் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.