விளையாட்டு

டென்னிஸ் போட்டிகளில் இருந்து சோம்தேவ் ஓய்வு

பிடிஐ

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் தொழில்முறை டென்னிஸ் போட்டி களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், “2017-ம் ஆண்டை புதிய குறிப்புகளுடன் தொடங்கும் விதமாக தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறு கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னை நேசித்தவர்களுக்கும், ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

31 வயதான சோம்தேவ் கடந்த 2012-ம் ஆண்டு தோள்பட்டை காயத் தால் பாதிக்கப்பட்டார். ஒரு கட்டத் தில் அவர் குணமடைந்த போதிலும் அதன்பின்னர் எந்தவித காரணமு மின்றி சர்வதேச போட்டிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

2008-ம் ஆண்டு டென்னிஸில் கால்பதித்த சோம்தேவ், டேவிஸ் கோப்பையில் இந்திய அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி உள் ளார். இந்திய அணி 2010-ல் உலக குரூப் பிரிவுக்கு தகுதி பெற்றதில் சோம்தேவ் முக்கிய பங்கு வகித் தார். ஏடிபி தொடர்களில் இருமுறை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

2009-ல் வைல்டு கார்டு வீரராக சென்னை ஓபனில் களமிறங்கிய அவர் இறுதிப் போட்டி வரை முன் னேறி அனைவரையும் ஆச்சர்யப் படுத்தினார். அந்த ஆட்டத்தில் அவர் குரோஷியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வியடைந்தார். இதுவரையிலும் சென்னை ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமை சோம்தேவ் வசமே உள்ளது. இதன்பின்னர் 2011-ல் தென் ஆப்பிரிக்கா ஓபனில் இறுதி போட்டி வரை முன்னேறியிருந்தார்.

2010-ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் சோம்தேவ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். கடந்த 2008-ல் நடைபெற்ற ஆடவருக்கான என்சிஏஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சோம்தேவ் 45 ஆட்டங்களில் விளையாடி 44 வெற்றிகளை குவித்தார். அவரது சாதனையை இதுவரை யாரும் முறி யடிக்கவில்லை. நாட்டின் உயரிய விருதான அர்ஜூனா விருது சோம்தேவுக்கு கடந்த 2011-ல் வழங்கப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT