ஐசிசி ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்கவைத்துள்ளார். அவேளையில் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 3-வது இடத்தில் நீடிக்கிறது.
தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸைவிட விராட் கோலி 4 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார். தற்போது கோலி 865 புள்ளிகளுடன் உள்ளார். ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோர் 10-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பந்து வீச்சில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இதேபோல் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இந்திய வீரர் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.
அணிகள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 116 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் நீடிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறக்கூடும்.
அதேவேளையில் மேற்கிந்தியத் தீவுகள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றினால் தரவரிசை பட்டியலில் 112 புள்ளிகளுடன் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக 4-வது இடத்துக்கு தள்ளப்படும். -