இன்சியானில் இன்று இந்தியாவுக்கு தங்க மழை! ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் இந்திய மகளிர் ரிலே அணி தங்கம் வென்றது.
4X400 ரிலேயில் பிரியங்கா பவார், டின்ட்டு லுகா, மந்தீப் கவுர், மசேத்திரா பூவம்மா ராஜூ ஆகிய இந்திய வீராங்கனைகள் கொண்ட அணி தங்கம் வென்று சாதனை படைத்தது.
3:28.68 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றதோடு புதிய ஆசிய விளையாட்டுச் சாதனையையும் புரிந்தனர்.