மும்பை புறநகர் பகுதியில் உள்ள கண்டிவாலி மைதானத்துக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டி அவரை கௌரவித்துள்ளது மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம்.
சச்சினை கௌரவிக்கும் வகையில் மும்பையில் திங்கள்கிழமை பாராட்டு நிகழ்ச்சியை மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் நடத்தியது. இதில் சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் கலந்து கொண்டார்.
மகாராஷ்டிர முதல்வர் பிரித்வி ராஜ் சவாண், மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் உள்ளிட்ட விஐபி-க்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது கண்டிவாலி மைதானத்துக்கு சச்சின் டெண்டுல்கர் ஜிம்கானா கிளப் என பெயர் சுட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கிரிக்கெட்டில் தனது வளர்ச்சிக்கு மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் உதவிகரமாக இருந்தது என்று நன்றி தெரிவித்துப் பேசிய சச்சின், தனது பெயரை மைதானத்துக்கு வைத்ததன் மூலம் மிகப்பெரிய கௌரவத்தை அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.