விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடுதல்: ஹீனாவுக்கு வெள்ளிப் பதக்கம்

செய்திப்பிரிவு

ஃபோர்ட் பென்னிங்கில் நடந்துவரும் ஐ.எஸ்.எஸ்.எப் (சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு) உலகக் கோப்பை போட்டியில், இந்திய துப்பாக்கி சூடுதல் வீராங்கனை ஹீனா சித்து (24) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பிஸ்டல் பிரிவில், அதிக எண்ணிக்கையில் பதக்கங்கள் வென்றவர் என்ற சாதனையை புரிந்தார்.

அமெரிக்காவின் ஃபோர்ட் பென்னிங்கில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடுதல் போட்டியின் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதி சுற்றில் மொத்தம் 200.8 புள்ளிகள் எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றார் ஹீனா.

பஞ்சாப்பின் லூதியானாவை சேர்ந்த ஹீனா சித்து, உலகக் கோப்பை துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர்.

உலக அளவில் ஏர் பிஸ்டல் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஹீனாவை, இந்த ஐ.எஸ்.எஸ்.எப் உலக கோப்பை வெற்றி முதலிடத்துக்கு இட்டுச் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT