விளையாட்டு

நியூஸிலாந்து வீராங்கனை ஹாக்லேவுக்கு ஹால் ஆப் பேம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் சிம்சன், நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை டீபி ஹாக்லே ஆகியோருக்கு ஹால் ஆப் பேம் கௌரவத்தை வழங்கியுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

கிரிக்கெட்டில் வீராங்கனை ஒருவர் இந்த கௌரவத்தைப் பெறுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெலின்டா கிளார்க், இங்கிலாந்தைச் சேர்ந்த இனித் பேக்வெல் மற்றும் ராய்ச்சல் ஹேய்கோ ஆகிய வீராங்கனைகள் ஹால் ஆப் பேம் விருது பெற்றுள்ளனர்.

நியூஸிலாந்தில் இதற்கு முன்பு ரிச்சட் ஹாட்லீக்கு மட்டும் ஹால் ஆப் பேம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது டீபி ஹாக்லே இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் இந்த கௌரவத்தைப் பெறும் 20-வது ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பாப் சிம்சன் பெற்றுள்ளார்.

சிட்னியில் வியாழக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இந்த கௌரவம் முறைப்படி அளிக்கப்படும் என்று ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT