டெல்லியில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தை மூட வினோத் ராய் தலைமையிலான புதிய நிர்வாகக் குழு முடிவெடுத் துள்ளது. டெல்லி அலுவலகத்தில் முன்னாள் நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர் களையும் இந்த குழுவினர் பதவி நீக்கம் செய்தனர். மேலும் அந்த அலுவலகத்தில் இருந்த இந்திய அணியின் ஊடகப் பிரிவு மேலாளர் நிஷாந்த் அரோராவை மும்பை அலுவல கத்துக்கு செல்லுமாறு நிர்வாக குழு கேட்டுக் கொண்டதால், அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய நிர்வாக குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி, “நிஷாந்த் அரோரா பதவி விலகிய நிலையில், அவருக்கு பதில் புதிய ஊடக மேலாளரை நியமிப்பது குறித்து பிசிசிஐயின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் ஜோக்ரி முடிவெடுப்பார்” என்றார்.