விளையாட்டு

பிக்பாஷ் டி20 தொடரில் இந்திய அணி வீராங்கனை

பிடிஐ

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

27 வயதான ஹர்மன்ப்ரீத் கவுர், பிக்பாஷ் மகளிர் டி 20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர்-ஜனவரியில் நடைபெறும் பிக்பாஷ் தொடரில் இந்திய ரசிகர்கள் ஹர்மன்பிரீத் கவுரின் ஆட்டத்தைக் கண்டு களிக்கலாம்.

ஆல்ரவுண்டரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுமான ஹர்மன்பிரீத் கவுருக்கு சிட்னி சிக்சர்ஸ் அணி உட்பட 3 அணிகளிடமிருந்து வாய்ப்ப்பு வந்தது. ஆனால் சிட்னி தண்டர் அணிக்கு தற்போது இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூரும் உறுதி செய்தார்.

இதற்கிடையே சிட்னி தண்டர் அணி கேப்டன் அலெக்ஸ் பிளாக் வெல் கூறும்போது, "இந்திய அணி யில் சில சுறுசுறுப்பான வீராங்க னைகள் இருப்பதை நாங்கள் அடையாளம் கண்டோம். வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் தனித்து நிற்கின் றனர்" என்றார்.

SCROLL FOR NEXT