விளையாட்டு

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டிவில்லியர்ஸ், ரபாடா முதலிடம்

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங், பவுலிங் தரவரிசையில் முறையே தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ரபாடா ஆகியோர் முதலிடம் வகித்துள்ளனர்.

பேட்டிங் தரவரிசையில் டிவில்லியர்சும், பவுலிங் தரவரிசையில் ரபாடாவும் முதலிடம் வகிக்கின்றனர். ரபாடா 4 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார்.

பேட்டிங் தரவரிசையில் வார்னர் 2-ம் இடத்திலும் விராட் கோலி 3-ம் இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் டுபிளேசிஸ், குவிண்டன் டி காக், ஆம்லா ஆகியோரும் டாப் 10-ல் உள்ளனர்.

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மட்டுமே டாப் 10ல் உள்ளார். ரோஹித் சர்மா 12-ம் இடத்திலும் தோனி 13-ம் இடத்திலும் ஷிகர் தவண் 15-ம் இடத்திலும் உள்ளனர்.

பவுலிங் தரவரிசையிலும் ரபாடாவுக்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்க பவுலர் இம்ரான் தாஹிர் உள்ளார். ஸ்டார்க் 3-ம் இடத்தில் உள்ளார். டாப் 10 பவுலிங் தரவரிசையில் இந்திய பவுலர்கள் ஒருவரும் இல்லை.

வேடிக்கை என்னவெனில் 11-ம் இடத்தில் உள்ள அக்சர் படேல் சாம்பியன்ஸ் டிராபி அணியிலேயே இல்லை. அமித் மிஸ்ரா 13-ம் இடத்தில் உள்ளார்.

அஸ்வின் 18-ம் இடத்திலும் ஜடேஜா 26-ம் இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் பேட்டிங் தரவரிசை டாப் 10:

டிவில்லியர்ஸ், டேவிட் வார்னர், விராட் கோலி, குவிண்டன் டிகாக், ஜோ ரூட், டுபிளெசிஸ், பாபர் ஆஸம், மார்டின் கப்தில், கேன் வில்லியம்சன், ஹஷிம் ஆம்லா

டாப் 10 பவுலர்கள்:

ரபாடா, இம்ரான் தாஹிர், மிட்செல் ஸ்டார்க், சுனில் நரைன், ஜோஷ் ஹேசில்வுட், டிரெண்ட் போல்ட், கிறிஸ் வோக்ஸ், மொகமது நபி, ஷாகிப் அல் ஹசன், மிட்செல் சாண்ட்னர்.

SCROLL FOR NEXT