கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விலகி உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று முன்தினம் அடிலெய்டில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டி யில் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக, ஆஸ்திரே லிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளை யாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மேலாளார் அலெக்ஸ் கூன்டுரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கணுக்காலில் காயம் ஏற்பட்ட ஸ்மித் உடனடி யாக களத்தில் இருந்து வெளியேறி உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் திரும்பினார்.
போட்டி முடிவடைந்த நிலை யில் நேற்று ஸ்மித்தின் தசைநார் பகுதியில் காயம் இருப்பது கண்டறிப்பட்டுள் ளது. இதில் இருந்து அவர் குணமடைய 7 முதல் 10 நாட்கள் தேவைப்படும். இதனால் நியூஸிலாந்து தொடரில் ஸ்மித்தால் பங்கேற்க முடியாது’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - நியூஸி லாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் வரும் 30-ம் தேதி ஆக்லாந்தில் நடை பெறுகிறது. 2-வது போட்டி 2-ம் தேதி நேப்பியரிலும், கடைசி போட்டி 5-ம் தேதி ஹாமில்ட னிலும் நடைபெறுகிறது.