ஒலிம்பிக் தடகள போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் அமெரிக் காவில் நடைபெற்று வருகிறது. இதில் வட்டு எறிதலில் 34 வயதான இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா கலந்து கொண்டார். இதில் அவர் 57.10 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ஆனால் ஒலிம் பிக் போட்டிக்கு தகுதி பெற 61 மீட் டர் தூரம் வட்டை எறிய வேண்டும்.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி யை பெறுவதற்கு பூனியாவுக்கு இதுதான் கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்த தவறினார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பினை பூனியா இழந்தார்.
காமன் வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற பூனியா மத்திய அரசின் ஒலிம்பிக் போட்டிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். 59.49 மீட்டர் தூரம் வரை வட்டு எறியும் திறனுடன்தான் அவர் அமெரிக்க தடகள போட்டியில் பங்கேற்றார்.
மேலும் 2012-ல் 64.76 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை யையும் பூனியா படைத்திருந்தார். 2010-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 61.51 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.
2004, 2008 மற்றும் 2012 ஒலிம்பிக் போட்டியில் பூனியா பங்கேற் றார். இதில் 2012 லண்டன் ஒலிம் பிக்கில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் தடகளத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றிருந்தார். ஆனால் லண்டன் ஒலிம்பிக்கில் பூனியாவால் 6-வது இடம் தான் பிடிக்க முடிந்தது.
பூனியா கூறும்போது, “ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றில் என்னால் முடிந்தவரை சிறப் பாக செயல்பட்டேன். ஆனால் கடைசியில் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டேன். மூட்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் பயிற்சிகளில் ஈடுபட எனக்கு அதிக அளவு நேரம் கிடைக்கவில்லை. எனது பயிற் சிக்கும், அமெரிக்க போட்டியில் கலந்து கொள்ள உதவியாக இருந்த விளையாட்டு துறை அமைச்சகத்துக்கும், சாய் அமைப் புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.