பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு சரிசமமாக இந்திய அணியும் பீல்டிங்கில் கடுமையாகச் சொதப்பியது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், கேதார் ஜாதவ் ஆகியோர் பீல்டிங் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
இதனையடுத்து விராட் கோலி பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
அன்று பாகிஸ்தானில் அதிக ரன் எடுத்த அசார் அலிக்கு ஹர்திக் பாண்டியாவும் புவனேஷ் குமாரும் கேட்ச்களை விட்டனர், பாண்டியா ஒரு ரன் அவுட் வாய்ப்பினையும் கோட்டை விட்டார்.
ஷதாப் கானுக்கு ஒரு கேட்சை கேதர் ஜாதவ் விட்டார், இதுதவிரவும் ஏகப்பட்ட மிஸ்பீல்ட்கள் ஆகியவையும் இந்திய அணியின் பலவீனத்தைக் காட்டின.
இந்நிலையில் விராட் கோலி கூறும்போது, “பேட்டிங் பந்து வீச்சு சரியாக உள்ளது, இதற்கு 10-க்கு 9 மார்க், ஆனால் பீல்டிங்கில் நான் இந்திய அணிக்கு 10க்கு 6 மதிப்பெண்களே அளிப்பேன். சிறந்த அணிகளுடன் ஆடும் போது பீல்டிங்கை இன்னும் இறுக்க வேண்டும்.