விளையாட்டு

துருக்கியில் சிக்கிய தடகள வீரர்கள் சென்னை திரும்பினர்

செய்திப்பிரிவு

துருக்கியில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர், வீராங்கனைகள் சென்னை வந்தடைந்தனர்.

துருக்கியில் உள்ள டிராப் சோனில் சர்வதேச அளவில் பள்ளி களுக்கு இடையேயான உலக ‘சாம்பியன்ஷிப்’ விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 149 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற னர். தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்ட னர். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவுதுருக்கியில் திடீரென்று ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்ற தமிழக வீரர், வீராங்கனைகளின் நிலைமை குறித்து அவர்களின் பெற்றோர் கவலை அடைந்தனர். சென்னை ராயபுரத்தை சேர்ந்த வீராங்கனை தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் தாங் கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று வாட்ஸ்-அப் மூலம் வீடியோ வில் பேசி பெற்றோருக்கு தகவல் அனுப்பினார்கள். இந்நிலையில் புரட்சியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகள் பாதுகாப்புடன் நாடு திரும்ப மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்தது.

போட்டிகள் நேற்று முன்தினம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகள் ஒவ் வொரு பிரிவாக நாடு திரும்பினர். டெல்லி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர், வீராங்கனைகள் விமானம் மூலம் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சென்னை வந்தடைந் தனர். அவர்களின் பெற்றோர் சென்னை விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். சென்னை வந்த 11 பேருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT