வங்கதேசம்-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் திங்கள்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 54.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. அதோடு முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முஷ்பிகுர் ரஹிம் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
2-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 282 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ரூதர்போர்ட் 13, பீட்டர் புல்டான் 14, கேப்டன் மெக்கல்லம் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 33.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கேன் வில்லியம்சன் 28, ராஸ் டெய்லர் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல்ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து இன்னும் 175 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.