மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதம் அடித்துச் சாதனை புரிந்தார்.
உணவு இடைவேளையின் போது இந்தியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 200 நாட் அவுட், அஸ்வின் 64 நாட் அவுட்.
இதன் மூலம் அயல்நாட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி.
நேற்று 143 நாட் அவுட் என்று இன்று தொடங்கிய விராட் கோலி கண்கொள்ளாக் காட்சி கவர்டிரைவ்களை தொடர்ந்தார்.
நேற்று 16 பவுண்டரிகள் அடித்திருந்த கோலி இன்று மேலும் 8 பவுண்டரிகளுடன் 281 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 200 ரன்கள் எடுத்து சாதானை புரிந்தார்.
அனில் கும்ப்ளே கைதட்டினார், மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய பேட்டிங் லெஜண்ட் சுனில் கவாஸ்கர் கரகோஷம் செய்தார். கோலியின் சாதனைகள் மேலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.