விளையாட்டு

ஜிது ராய், ஹீனா சித்து ஏமாற்றம்

செய்திப்பிரிவு

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான ஜிது ராய்க்கு கடைசி இடமே கிடைத்தது.

தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட ஜிது ராய் இறுதிச்சுற்றில் தடுமாறினார். 8 பேர் பங்கேற்ற இறுதிச்சுற்றில் 78.7 புள்ளிகளை மட்டுமே பெற்ற ஜிது ராய் கடைசி இடத்தையே பிடித்தார்.

இந்தப் பிரிவில் வியட்நாமின் ஹோயாங் ஜுவான் 202.5 புள்ளிகளுடன் தங்கமும், பிரேசிலின் பெலிப் 202.1 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனாவின் பாங் வெய் 180.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். நடப்பு சாம்பியனான தென் கொரியாவின் ஜின் ஜாங்கோவுக்கு 5-வது இடமே கிடைத்தது.

மற்றொரு இந்தியரான குருபிரீத் சிங் தகுதிச்சுற்றைத் தாண்டவில்லை. அவர் தகுதிச்சுற்றில் 20-வது இடத்தைப் பிடித்தார்.

ஹீனா சித்து வெளியேற்றம்

மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து தகுதி சுற்றில் 380 புள்ளிகளுடன் 14-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் அவர் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

இந்தப் பிரிவில் சீனாவின் ஹெங் தங்கம் வென்றார். ரஷ்யாவின் விடலினா வெள்ளிப் பதக்கமும், கிரிஸின் அனா கோரகாகி வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT