விளையாட்டு

ஜோஷ்னா சாம்பியன்

செய்திப்பிரிவு

ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம் பியன்ஷிப் போட்டிகள் சென்னை யில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான ஜோஷ்னா சின்னப்பாவும், தீபிகா பல்லிகலும் மோதினர். இப்போட்டியில் ஜோஷ்னா 13-15, 12-10, 11-13, 11-4, 11-4 என்ற செட்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரரான சவுரவ் கோஷல் தோல்வியடைந்தார். ஹாங்காங் வீரரான மேக்ஸ் லீயை இறுதி ஆட்டத்தில் எதிர்கொண்ட சவுரவ் கோஷல் 11 5, 4 11, 8 11, 7 11 என்ற செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

SCROLL FOR NEXT