விளையாட்டு

மாரியப்பனுக்கு ரூ.5 லட்சம் பரிசு: எச்.வசந்தகுமார் எம்எல்ஏ அறிவிப்பு

செய்திப்பிரிவு

ரியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் சேலத்தை சேர்ந்த தங்கவேலு மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை சேர்த்தார்.

பதக்கம் வென்ற அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அரசு தங்கவேலுவுக்கு ரூ. 2 கோடி பரிசு அறிவித்து கவுரவித்தது.

தங்கப் பதக்கம் வென்றதை தொடர்ந்து 18-ம் தேதி நடைபெறும் பாராலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் தேசியக் கொடியை மாரியப்பன் ஏந்திச் செல்வார் என இந்திய பாராலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாரியப்பனுக்கு, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு வசந்த் அன் கோ குழுமம் சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் வசந்தகுமார் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT