விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கள் லண்டன் நகரில் நடந்து வருகி றது. இதில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜெர்மனி யின் அன்னிகா பெக்கை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
முன்னதாக மகளிர் பிரிவில் நேற்று நடந்த மற்றொரு 3-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் கோகோ வேண்டவேகி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ராபர்டா வின்சியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
ஆண்களுக்கான பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக் தோல்வியடைந்தார். அமெரிக்க வீரரான சாம் குர்ரே 7 6, 6 1, 3 6, 7 6 என்ற செட்கணக்கில் அவரை வீழ்த்தினார்.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 6 3, 7 5, 6 2 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை வென்றார்.