சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததுடன், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இருபது ஓவர் போட்டியிலும் படுதோல்வியடைந்து நாடு திரும்பியுள்ளது.
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆண்டி பிளவர் விலகியுள்ளார்.இந்நிலையில் வார்ன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆக வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியானது. ட்விட்டர் இணையதளத்தில் வார்ன் கூறியிருப்பதாவது: இங்கிலாந்து அணிக்கு நான் பயிற்சியாளராக வேண்டுமென்று அந்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கை தொடர்பாக நான் யோசித்து வருகிறேன் என்பதுதான் எனது பதில் என்று வார்ன் கூறியுள்ளார்.