விளையாட்டு

இளம் இந்திய அணி தோல்வி

செய்திப்பிரிவு

19 வயதுக்குட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இளம் இந்திய அணி தோல்வியடைந்தது.

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த 19 வயதுக்குட்டோருக்கான இங்கிலாந்து அணி 255 ரன்கள் எடுத்தது. ராவ் லின்ஸ் 107 ரன்கள் எடுத்தார். 256 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இளம் இந்திய அணி 42.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் ரானா 87 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 101 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்களான பிரித்வி ஷா 9, சுபம்கில் 29, சல்மான் கான் 8, மயங்க் ராவத் 0, ஹெட் படேல் 20, கே.எல்.நகர்கோட்டி 37 ரன்களில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மேத்யூவ் பிஷர் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 19 வயதுக்குட் பட்டோருக்கான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி நாளை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT