விளையாட்டு

5-வது முறையாக சிறந்த தடகள வீரர் பட்டம் வெல்வாரா உசேன் போல்ட்?

செய்திப்பிரிவு

உலகின் சிறந்த தடகள வீரராக 5-வது முறையாக ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டுக்கான, உலகின் சிறந்த தடகள வீரரை தேர்வு செய்வதற்கான இறுதிப் பட்டியலை சர்வதேச தடகள போட்டிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உசேன் போல்ட் பெயர் இடம் பெற்றுள்ளது. இறுதி முடிவு வருகிற 16- ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்வுள்ளது.

ஏற்கெனவே 2008, 2009, 2011 மற்றும் 2012 என 4 முறைகளில் இந்தப் பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், உசேன் போல்ட் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT