விளையாட்டு

தடகளத்தில் ஆர்வம் காட்டாத ரசிகர்கள்: வெறிச்சோடிக் கிடக்கும் ஒலிம்பிக் மைதானம்

செய்திப்பிரிவு

தடகளப் போட்டிகளைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் இப்போட்டிகள் நடக்கும் ரியோ மைதானம் வெறிச்சோடி காணப் படுகிறது.

ரியோ ஒலிம்பிக்கில் தடகளப் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. 46,931 பேர் அமர்ந்து தடகள போட்டிகளை ரசிக்கும் வகையில் அதற்கான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முதல் நாளில் தடகளப் போட்டிகளை காண சொற்ப அளவிலான ரசிகர்களே மைதானத்துக்கு வந்திருந்தனர். இதனால் ரசிகர்கள் அமரும் இடம் வெறிச்சோடிக் காணப் பட்டது.

தடகளத்தைப் போன்றே பீச் வாலிபால், கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடக்கும் மைதானங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இனிவரும் போட்டிகளுக்கான டிக்கெட்களும் 78 சதவீதம் விற்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இது போட்டி அமைப்பாளர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. போட்டியை நேரில் காண வருமாறு உசேன் போல்ட் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் பரவியுள்ள ஜிகா வைரஸ் காரணமாகவும், பாது காப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் வெளிநாட்டு ரசிகர்கள் பலரும் ரியோ நகருக்கு வராததே மைதானங்கள் காலியாக இருப் பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் செய்தித் தொடர்பாளரான மரியோ அண்டிராடா இதுகுறித்து கூறும் போது, “மைதானங்கள் காலியாக இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான். இதை விரைவில் சரிசெய்ய வேண்டும். விற்கப் படாத டிக்கெட்களை ஸ்பான் சர்கள் மூலம் உள்ளூர் குழந்தை களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT