விளையாட்டு

இலங்கை - நியூசிலாந்து கிரிக்கெட் மழையால் கைவிடப்பட்டது

செய்திப்பிரிவு

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

நியூலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், அம்பணத்தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து 4.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், முடிவு எதும் எட்டப்படாமல் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது.

இலங்கை அணியில் தில்ஷான் அதிகபட்சமாக 114 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். மேத்யூஸ் அதிரடியாக விளையாடி 64 பந்துகளில் 64 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணியில் காயில் மில்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT