விளையாட்டு

கேட்சால் மேட்சும் போனது: மலிங்கா வருத்தம்

செய்திப்பிரிவு

காலிஸ் கொடுத்த கேட்சை நான் பிடிக்காமல் விட்டதால் அணி தோல்வியடைந்துவிட்டது என்று மும்பை இண்டியன்ஸ் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியிடம், மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கொல்கத்தா நிர்ணயித்த 164 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் மலிங்கா அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். எனினும் தோல்விக்கு பொறுப்பேற்கும் வகையில் மலிங்கா கூறியது:

முதல் பத்து ஓவர்கள் வரை எங்கள் பந்து வீச்சு சிறப்பானதாகவே இருந்தது. பின்னர் காலிஸ், மணீஷ் பாண்டே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து வலுவான ஸ்கோரை எட்டிவிட்டனர். 34 ரன்கள் எடுத்தபோது காலிஸ் கொடுத்த கேட்சை நான் பிடிக்காமல் நழுவ விட்டு

விட்டேன். இதனால் அவர் 46 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவினார். எனவே நான் பிடிக்காமல் விட்ட கேட்ச் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் எனதுபந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. ஆனால் அணி என்ற அளவில்நாங்கள் தோல்வியடைந்து விட்டது வருத்தம் அளிக்கிறது என்றார் மலிங்கா.

SCROLL FOR NEXT