இந்திய அணிக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் லிட்டன் தாஸ் என்ற விக்கெட் கீப்பர் இடம்பெற்றுள்ளார். இவர் முதல் தர கிரிக்கெட்டில் சமீபமாக இரட்டை சதம் அடித்ததால் வாய்ப்பு பெற்றார்.
கிழக்கு மண்டலத்துக்கு ஆடிய லிட்டன் தாஸ், மத்திய மண்டலத்துக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கி 241 பந்துகளில் 26 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 219 ரன்களை விளாசினார். பிப்ரவரி 9-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக இந்த டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்திய அணியை பாடுபடுத்திய இடது கை கட்டர்ஸ் பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயத்திலிருந்து முழுதும் குணமடையாததால் சேர்க்கப்படவில்லை.
ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணி வருமாறு:
முஷ்பிகுர் ரஹிம் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கயேஸ், சபீர் ரஹ்மான், மஹமுதுல்லா, ஷாகிப் உல் ஹசன், மெஹதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கம்ருல் இஸ்லாம் ராபி, சவுமியா சர்க்கார், தஸ்கின் அகமது, சுபாஷிஷ் ராய், லிட்டன் தாஸ், மோமினுல் ஹக், ஷபியுல் இஸ்லாம்.