விளையாட்டு

இந்தியா - சிலி ஆட்டம் டிரா

பிடிஐ

உலக ஹாக்கி லீக் 2-வது சுற்று போட்டிகள் வரும் 1-ம் தேதி கனடா வில் உள்ள மேற்கு வான்கூவர் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக கனடா சென் றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று சிலி அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதியது.

18-வது நிமிடத்தில் அகுஸ்டினா கோல் அடிக்க சிலி அணி 1-0 என முன்னிலை பெற்றது. 35-வது நிமிடத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது. பெனால்டி கார்னர் மூலம் அனுபா பர்லா அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சம நிலையை அடைந்தது. அடுத்த நிமிடத்தில் வந்தனா கட்டாரியா அருமையாக பீல்டு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது. 53-வது நிமிடத்தில் சிலி அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது. இதை அகுஸ்டினா கோலாக மாற்ற ஆட்டம் 2-2 என டிராவில் முடிவடைந்தது.

SCROLL FOR NEXT